தாய்லாந்தில் மேலும் ஒருநாள் பொது விடுமுறை

தாய்லாந்தில் மேலும் ஒருநாள் பொது விடுமுறை

1 mins read
ea626375-3c93-4a1c-84e6-8a1109467983
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தாய்லாந்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 48 விழுக்காடு அதிகரித்து 4.4 மில்லியனாகியுள்ளது. - படம்: இபிஏ

பேங்காக்: ஏப்ரல் மாத பாரம்பரிய புத்தாண்டு காலத்தின்போது பொதுச் சேவை ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் பொது விடுமுறை வழங்க தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏப்ரல் 12ஆம் தேதி சிறப்பு விடுமுறை தினம் அனைத்து அரசாங்க அலுவலகங்களுக்கும் அமைப்புகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாய்லாந்தின் பாரம்பரிய சோங்ரான் புத்தாண்டு விடுமுறை ஏப்ரல் 16 வரை ஐந்து நாள்களாக அதிகரிக்கிறது.

இந்த நடவடிக்கை உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தி அதற்காக செலவிடும் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 13ஆம் தேதி பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையில் கூடிய அமைச்சரவை மேலும் ஒரு நாள் விடுமுறைக்கு அனுமதியளித்தது.

குறிப்புச் சொற்கள்