போலிக் காணொளிகளை முடக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மும்முரம்

போலிக் காணொளிகளை முடக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மும்முரம்

1 mins read
2e936c1c-e0e4-4cc6-bfbf-99053f0f3d21
அண்மையில் பல போலியான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.  - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: மெட்டா, மைக்ரோசாப்ட், கூகல், ஓப்பன் ஏஐ, டிக்டாக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து போலிக் காணொளிகளை முடக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளன.

அதுகுறித்த ஒப்பந்த தகவல்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது

இவ்வாண்டில் உலகின் பல நாடுகளில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளன. தொழில்நுட்பத்தின் உதவியால் அரசியல் தலைவர்களின் உருவத்தைக் கொண்டு போலியான காணொளிகள் தயாரிக்கப்படக்கூடும்.

இதனால் தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் குழப்பமடையலாம், இதனால் தேர்தல் முடிவுகளும் பாதிக்கப்படலாம்.

இதைத் தடுக்கும் விதமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது ஒன்றினைந்துள்ளன.

அண்மையில் பல போலியான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுவது போல் ஒரு போலியான காணொளி வெளியானது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்