தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சில் பரவலாகி வரும் “மஞ்சள் வாத்து” மோகம்

1 mins read
4d7f120c-8ca9-4af1-9396-d310487621f7
பிலிப்பீன்ஸ் மக்கள், தங்களுடைய தினசரி வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்த, மஞ்சள் ரப்பர் வாத்துகளுடன் இணைக்கப்பட்ட முடி கிளிப்புகளை தலையில் அணிந்து கொண்டிருக்கிறார்கள்.  - படம் : பேஸ்புக்

பிலிப்பீன்ஸ் மக்கள், தங்களுடைய தினசரி வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்த, மஞ்சள் நிற ரப்பர் வாத்துகளுடன் இணைக்கப்பட்ட முடி கிளிப்புகளை தலையில் அணிந்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த மோகம், பிலிப்பீன்சின் தலைநகரான மணிலாவிற்கு வடக்கே 200 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள பாகுயோ நகரில் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடந்த காஸ்ப்ளே மாநாட்டின் போது தொடங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ரப்பர் வாத்துகளைத் தவிர்த்து, கோழிகள், இதய வடிவிலானமுடி கிளிப்புகள் உள்ளன. 

“நாங்கள் இந்த அண்மைய போக்கை பின்பற்ற விரும்போகிறோம். நாங்கள் பின்தங்கியிருக்க விரும்பவில்லை.” என்று, பிலிப்பீன்ஸ்  பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜிம்முவேல் நேவல் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். 

குறிப்புச் சொற்கள்