பிலிப்பீன்ஸ் ராணுவம்-இஸ்லாமியப் போராளிகள் மோதலில் ஏழு பேர் பலி

பிலிப்பீன்ஸ் ராணுவம்-இஸ்லாமியப் போராளிகள் மோதலில் ஏழு பேர் பலி

1 mins read
d5532cbb-1b1b-42d1-8b43-93cfad018f12
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிலிப்பீன்சின் மராவி நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கத்தோலிக்கப் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர். பலர் காயமடைந்தனர். - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்ஸ் ராணுவத்துக்கும் தௌலா இஸ்லாமியப் போராளி அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டோரில் ஆறு ராணுவ வீரர்களும் குறைந்தது ஒரு போராளியும் அடங்குவர்.

நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிலிப்பீன்சின் மராவி நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கத்தோலிக்க பிரார்த்தனைக்கூட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர். பலர் காயமடைந்தனர்.

அந்தத் தாக்குதலுக்கு தௌலா இஸ்லாமியப் போராளி அமைப்பு காரணம் என்று நம்பப்படுகிறது.

அந்த அமைப்பின் பேராளிகளைத் தேடும் பணிகளின்போது பிலிப்பீன்ஸ் ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்