அரிய வெள்ளை முதலைக்கு அறுவை சிகிச்சை

அரிய வெள்ளை முதலைக்கு அறுவை சிகிச்சை

1 mins read
5d2e59e2-f1d0-4225-bb00-9ae55209cb4d
36 வயது முதலையின் உடலில் 70 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. - படம்: ஃபேஸ்புக்

வாஷிங்டன்: அரிய வெள்ளை நிற முதலை ஒன்றின் வயிற்றிலிருந்த 70 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள ‘ஹென்றி டோர்லி விலங்கியல் தோட்டம், கடலடி உலகம்’ எனும் சுற்றுலா இடத்திற்கு வருகை புரிவோர், 36 வயதுடைய அந்த முதலையின் இடத்திற்குள் நாணயங்களைப் போட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிஎன்என் தெரிவித்தது.

நாணயங்களின் மொத்த மதிப்பு சுமார் 7 அமெரிக்க டாலர் என்று அறியப்படுகிறது.

அந்த நாணயங்களால் சிக்கல் ஏற்படுவதற்குமுன் சீக்கிரம் அகற்றுவதே தீர்வு என்று விலங்கியல் தோட்டப் பணியாளர்கள் முடிவெடுத்தனர்.

விருப்பம் நிறைவேறுவதற்காக சிலர் நாணயங்களை இவ்வாறு கிணறுகளில் வீசுவது வழக்கம். ஆனால், முதலையின் இருப்பிடத்தில் வருகையாளர்கள் இவ்வாறு செய்யக்கூடாது என்று விலங்கியல் தோட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்