மூளையில் சில்லு பொருத்தப்பட்டவரின் நிலை குறித்து புதிய தகவலை வெளியிட்ட எலான் மஸ்க்

மூளையில் சில்லு பொருத்தப்பட்டவரின் நிலை குறித்து புதிய தகவலை வெளியிட்ட எலான் மஸ்க்

1 mins read
cd82b5e9-331d-48b2-ac56-71b7c1968d50
மூளையில் சில்லு பொருத்தப்பட்ட நோயாளி நலமுடன் இருப்பதாக திரு எலான் மஸ்க் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

சான் பிரான்சிஸ்கோ: மூளையில் நியூராலிங்கின் சில்லு பொருத்தப்பட்ட நோயாளி தற்போது தன் சிந்தனையைப் பயன்படுத்தி கணினி வருடும் கருவியை நகர்த்துகிறார் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறினார்.

மேலும், இந்தச் சோதனை நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளது என்றும் இந்தச் சில்லு பொருத்தப்பட்டதால் அந்த நோயாளியின் உடலில் எந்த விதமான மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் திரு மஸ்க் தெரிவித்தார்.

நோயாளி சிந்திப்பதன் மூலம் கணினி திரையைச் சுற்றி வருடும் கருவியின் குறியீட்டை நகர்த்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் சிந்தனையின் மூலம் முடிந்தவரை பல பொத்தான்களை அழுத்த முயற்சிக்கிறோம்,” என்றும் திரு மஸ்க் மேலும் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்