தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு காஸா ஆதரவாளர்கள் எச்சரிக்கை

1 mins read
cf76ad3e-d62d-4007-b1f0-dcab5f5da235
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ள ரஃபா பகுதிமீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தவுள்ளதால், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. - படம்: ராய்ட்ட்ர்ஸ்

மிச்சிகன்: முன்னோட்ட வாக்குபதிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜனநாயகக் கட்சியினர் புறக்கணிக்க வேண்டும் என மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி திரண்ட கிட்டத்தட்ட 100 பேர் கொண்ட குழு வலியுறுத்தியது.

அந்த அரசியல் கூட்டத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை நிறுத்த ஜோ பைடன் எடுத்த முயற்சிகள் குறித்தும் போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அவர் கொடுத்த அழுத்தம் பற்றியும் விவாதிக்கப்பட்டன.

இந்தப் பேரணியை லிஸ்ஸன் டு மிச்சிகன் என்ற குழு நடத்தியது.

அடுத்த வாரம் நடக்கவிருக்கும் முதன்மை வாக்கெடுப்பில் திரு பைடனுக்கு எதிராக வாக்களிக்க வாக்காளர்களை அக்குழு வலியுறுத்தியது.

இந்நிலையில், சிரியாவின் தலைநகரான டமாஸ்கசில் இருக்கும் காஃப்ர் சௌசா வட்டாரத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களை பிப்ரவரி 21ஆம் தேதி (புதன்கிழமை) இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை அது குறிப்பிடவில்லை.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நடந்துவரும் போரைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், இஸ்ரேல் ரஃபாமீது தரைவழித் தாக்குதல் நடத்த தயாராகி வரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தின் அவசியம் குறித்துத் தற்போது அவர் பேசி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்