குவாங்சோ: சீனாவின் குவாங்சோ நகருக்கு அருகில் உள்ள பெர்ல் ஆறுக்கு மேல் கட்டப்பட்ட பாலம் மீது கப்பல் ஒன்று மோதியதை அடுத்து குறைந்தது இருவர் மாண்டனர்.
கப்பல் மோதியதால் பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது. இதன் காரணமாக அதில் இருந்த வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக சீன ஊடகம் பிப்ரவரி 22ஆம் தேதியன்று தெரிவித்தது.
மூவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான கப்பலின் கடலோடி ஒருவர் காயமடைந்ததாகவும் இருவர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாயமானோரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

