பெய்ஜிங்: 2025ஆம் ஆண்டுக்கான முக்கிய பருவநிலை இலக்குகளைத் தவறவிடும் அபாயத்தை சீனா எதிர்நோக்குவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியில் சீனா முதலீட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது பொருளியலை வளர்ச்சியடையச் செய்ய நிலக்கரி மற்றும் எரிபொருளை சீனா சார்ந்திருக்கிறது.
உலகின் கரியமிலவாயு வெளியேற்றத்தில் சீனா மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.