ஹூதி தாக்குதலுக்குள்ளான ரூபிமர் கப்பலுக்கு பெருத்த சேதம்: அமெரிக்கா

1 mins read
c29ef95f-93c8-4976-bacb-4c3d51833e83
படம்: - தமிழ்முரசு

கெய்ரோ: பிரிட்டனைச் சேர்ந்த ரூபிமர் எனப் பெயரிடப்பட்டுள்ள சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அக்கப்பல் பெருத்த சேதமடைந்ததாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய தளபத்தியம் தெரிவித்துள்ளது.

அதனால் 29 கிலோமீட்டர் தொலைவிற்கு எண்ணெய்க் கசிவு காணப்படுவதாக அது குறிப்பிட்டது.

ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த அக்கப்பலை பிப்ரவரி 18ஆம் தேதி ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்கினர்.

தற்போது ரூபிமர் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அக்கப்பல், 41,000 டன்னுக்கு மேற்பட்ட உரத்தை ஏற்றிச் சென்றதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்