கெய்ரோ: ஏமனின் ஹூதிப் படைகள் பாய்ச்சிய ஏவுகணை இலக்கு தவறியதாக அமெரிக்காவின் மத்திய தளபத்தியம் பிப்ரவரி 26ஆம் தேதியன்று தெரிவித்தது.
ஏடன் வளைகுடாவில் இருந்த அமெரிக்க எண்ணெய்க் கப்பலைக் குறிவைத்து அந்த ஏவுகணை பாய்ச்சப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஏவுகணை கடலில் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஏவுகணையால் யாருக்கும் காயம், சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்த தொடங்கியதிலிருந்து அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஹூதிப் படைகள், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றன.
பிப்ரவரி 25ஆம் தேதியன்று செங்கடலில் தென்பகுதிக்கு மேல் பறந்த இரண்டு ஆளில்லா வானூர்திகளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.