காஸாவில் போர் நிறுத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: பைடன் நம்பிக்கை

1 mins read
2f0ae7f6-9b32-435a-a142-5098feb32516
காஸாவில் போர் நிறுத்தம் அடுத்த வாரத் தொடக்கத்தில் இடம்பெறும் என்று நம்புவதாகக் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 26 ) கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: காஸாவில் போர் நிறுத்தம் அடுத்த வாரத் தொடக்கத்தில் இடம்பெறும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 26 ) கூறினார்.

எகிப்து, கத்தார், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே உள்ள போரை நிறுத்தும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,  காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியும் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

போர் நிறுத்தத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் செல்கின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 

ஒப்பந்தம் தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக ராணுவமும் உளவுத்துறை அதிகாரிகளும் கத்தாருக்குச் சென்றுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்