ஹியூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏழு இடங்களில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
அவற்றில் ஒன்று டெக்சஸ் மாநில வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய காட்டுத் தீ என்று அதிகாரிகளால் கூறப்படுகிறது.
காட்டுத் தீ காரணமாகப் பல வீடுகள் அழிந்துவிட்டன.
வீடுகளிலிருந்து வெளியேறுமாறு பலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலத்த காற்று, சுட்டெரிக்கும் வெயிலை அடுத்து, டெக்சஸ் மாநிலத்தில் 25 இடங்களில் மூண்ட காட்டுத் தீயை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
அவற்றில் 18 இடங்களில் மூண்ட காட்டுத் தீ பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காட்டுத் தீ காரணமாக முன்னெச்சரிக்கையாக வடக்கு நகரமான அமரில்லோவில் உள்ள அணுவாயுத ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.