சட்டப்படி வெளிநாட்டவர்களுக்கு வாடகைத்தாய் சேவை வழங்க தாய்லாந்து திட்டம்

1 mins read
2b7af910-9907-49c0-80cb-c39e865e2485
தாய்லாந்தில் வாடகைத்தாய் சேவை தொடர்பாக 2015ஆம் ஆண்டு முதல் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு சட்டப்படி வாடகைத்தாய் சேவையை வழங்க அந்நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தாய்லாந்தில் வாடகைத்தாய் சேவை தொடர்பாக 2015ஆம் ஆண்டு முதல் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு வாடகைத்தாய் சேவை வழங்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது அந்தத் தடையை நீக்கி, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் சேவையை வழங்க திட்டமிட்டுவருவதாக தாய்லாந்தின் சுகாதாரத் துறை மூத்த அதிகாரி அர்கோம் பிரடிட்ஸ்சுவான் தெரிவித்தார்.

வாடகைத்தாய் சேவையை பெற விரும்பும் வெளிநாட்டு தம்பதி சட்டப்படி திருமணம் செய்திருக்க வேண்டும் என்றும் மேலும் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை, பாதுகாப்பு போன்றவை வழங்க வேண்டும் என்றும் அர்கோம் குறிப்பிட்டார்.

தம்பதி அவர்களுக்கான வாடகைத் தாயை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரலாம் அல்லது தாய்லாந்திலேயே வாடகைத் தாயை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வாடகைத் தாய் தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கக் குழு அனுமதி அளித்தபின் தான் தொடரமுடியும் என்றும் அர்கோம் தெரிவித்தார்.

வாடகைத் தாய் சட்ட மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் இம்மாதத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தபின் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்