புட்டினின் $65 மில்லியன் மதிப்பிலான புதிய சுற்றுக்காவல் கப்பல் அழிக்கப்பட்டது

புட்டினின் $65 மில்லியன் மதிப்பிலான புதிய சுற்றுக்காவல் கப்பல் அழிக்கப்பட்டது

1 mins read
413acaad-46e6-4c9b-bc5e-d917c3647a13
ஆளில்லா வானூர்திகளால் தாக்கப்பட்ட ரஷ்ய சுற்றுக்காவல் கப்பலில் இருந்து வெளியேறும் கரும்புகை. - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ரஷ்யாவின் ஆகப் புதிய சுற்றுக்காவல் கப்பலைத் தான் அழித்துவிட்டதை உக்ரேனிய ராணுவம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.

ஏறத்தாழ US$65 மில்லியன் பெறுமானமுள்ள அந்தக் கருங்கடல் சுற்றுக்காவல் கப்பலை செர்கெய் கோதோவ் என உக்ரேனிய ராணுவ உளவுத்துறை அடையாளம் கண்டது.

அந்தக் கப்பல் ரஷ்ய ஆக்கிரமிப்பின் அடையாளம் என உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கியின் படையணித் தலைவர் ஆன்ட்ரே யெர்மக் டெலிகிராமில் வர்ணித்தார். அது உக்ரேனிய கிரைமியாவில் வலம்வரக் கூடாது என்றார் அவர்.

ரஷ்ய பெருநிலத்துடன் கிரைமிய தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை, உக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பின் 741வது தினமாகும்.

குறிப்புச் சொற்கள்