தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்திலிருந்து வீழ்ந்த டயர் வாகனங்களை நசுக்கியது

1 mins read
0605ed2d-866e-4cc7-86ba-d892e4c93e7c
சம்பவம் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: RADARBOX / எக்ஸ்

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஜப்பான் சென்றுகொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து டயர் வீழ்ந்து வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாகனங்களை நசுக்கியது.

அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. ஜப்பானின் ஒசாக்கா நகருக்குச் சென்றுகொண்டிருந்த அந்த போயிங் 777-200 விமானம் லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது.

விமானத்தில் 249 பேர் இருந்தனர். யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

விமானத்திலிருந்து டயர் விழுந்தது பதிவுசெய்யப்பட்ட காணொளிகளை ரேடார்பாக்ஸ் நிறுவனம் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தது. டயரால் வாகனங்கள் சேதமடைந்ததாகத் தென்படும் காட்சிகளும் காணொளிகளில் பதிவாயின.

மாற்று விமானம் ஒன்று பயணிகளை ஒசாக்காவுக்கு அழைத்துச் செல்லும் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்