இந்தோனீசியாவில் நிலச்சரிவு, வெள்ளம்; குறைந்தது 10 பேர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 10 பேர் மாண்டனர்.

மேலும், குறைந்தது 10 பேரைக் காணவில்லை. உள்ளூர் அதிகாரி ஒருவர் சனிக்கிழமையன்று (மார்ச் 9) இத்தகவல்களை வெளியிட்டார்.

காணமற்போனவர்களைத் தேடும் பணிகளுக்கு மோசமான வானிலை இடையூறாக இருக்கிறது என்று பெசிசிர் செல்லாட்டான் பேரிடர் தடுப்பு அமைப்பின் தற்காலிகத் தலைவர் டோனி யுஸ்ரிஸால் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேற்கு சுமத்ராவில் உள்ள பெசிசிர் செலாட்டான் பகுதியில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்தது, நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 46,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேறி தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

நிலச்சரிவில் குறைந்தது 14 வீடுகள் புதைந்துபோனதாகவும் 20,000க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும் திரு டோனியின் அறிக்கை குறிப்பிட்டது. எட்டு பாலங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கு சுமத்ராவின் பாடாங் பரியாமான் பகுதியில் புதன்கிழமை (மார்ச் 7), வியாழக்கிழமை (மார்ச் 8) பெய்த கனமழையால் ஆறுகளில் நீரின் அளவு அதிகரித்ததால் வெள்ளம் சூழ்ந்ததுடன் நிலச்சரிவு ஏற்பட்டது; அதனால் குறைந்தது மூவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!