தாய்மொழிப் பள்ளிகள் சர்ச்சை: பேசித் தீர்க்க அம்னோ, டிஏபி கட்சிகள் தயார்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள, அம்னோ எனப்படும் ஐக்கிய மலாய்க்காரர் தேசிய அமைப்பு, ஜனநாயக செயல் கட்சி (டிஏ பி) ஆகிய இரு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான பிரச்சினை பற்றி பேச உடன்பட்டுள்ளனர். இது, நீண்டகாலப் போட்டியாளர்களுக்கு இடையிலான நாகரிகமான பேச்சுவார்த்தையின் நம்பிக்கையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே, சீன, தமிழ்ப் பள்ளிகள் நாட்டின் பல இன சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. ஒற்றுமைக்கு தேசிய பள்ளியே சிறந்தது என்று கூறினார்.

மலேசியாவில் பொதுப் பள்ளிக் கல்வி, மலாய் மொழியில் கற்பிக்கப்படும் தேசியப் பள்ளிகள் அல்லது சீனம் அல்லது தமிழ் மொழியில் கற்பிக்கும் பள்ளிகள் என பிரிக்கப்பட்டுள்ளன. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பள்ளிகள் பாதுகாக்கப்படுகின்றன.

கடந்த மாதம் சீன, தமிழ் மொழிப் பள்ளிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும் என்று இரண்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.

டாக்டர் அக்மல் மார்ச் 9ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் அறிக்கையில், மலேசியாவிலுள்ள 1,800க்கும் மேற்பட்ட தாய்மொழிப் பள்ளிகளை அரசாங்கம் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டுமென பரிந்துரைத்திருந்தார்.

தாய்மொழிப் பள்ளிகள் இனப் பிரிவினைக்கும் ஒற்றுமையின்மைக்கும் காரணம் என்று எண்ணுவது தவறான கருத்து என்று முன்னாள் டிஏபி தலைவர் பி. இராமசாமி டாக்டர் அக்மாலைச் சாடினார்.

தமிழர் உரிமை அமைப்பான ‘உரிமை’ இயக்கத்தை உருவாக்க டிஏபி-யிலிருந்து விலகிய முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சருமான டாக்டர் இராமசாமி, அக்மால் தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்க விரும்புகிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

மார்ச் 11 ஆம் தேதி, டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் இதுகுறித்து பேச்சு நடத்த டாக்டர் அக்மலுக்கு முகநூலில் அழைப்பு விடுத்தார்.

அழைப்பை டாக்டர் அக்மல் ஏற்றுக்கொண்டார். மார்ச் 17ஆம் தேதி சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, இரு கட்சிகளுக்கும் இடையே பதற்றங்களை தணித்ததாகத் தோன்றினாலும், எதிர்காலத்தில் இனம் சார்ந்த விவாதங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்குமா என்று கணிக்க முடியாது என்று கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தாய்மொழிப் பள்ளிகள் குறித்து, பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தாய்மொழி கல்வி முறையை அகற்றும் அல்லது முடக்கும் திட்டம் எதுவும் இல்லை என, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் மார்ச் 11ஆம் தேதி கூறியுள்ளார்.

தாய்மொழிப் பள்ளிகளின் செயல்பாட்டை தேசிய கல்விச் சட்டம் அங்கீகரிக்கிறது. அதனால், அவை தொடர்ந்து செயல்படும் என்று பட்லினா உறுதியளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!