தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலி

1 mins read
667957f2-29ce-4fe8-9b6a-8e53efb1231c
இஸ்‌ரேலியத் தாக்குதலால் உடைமைகளை இழந்து தவிக்கும் பாலஸ்தீனர்கள். - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: காஸா மீது மார்ச் 19 அதிகாலை இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் மாண்டதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஃபா, காஸா முனையின் மத்திய பகுதி ஆகியவற்றைக் குறிவைத்து இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

எகிப்து எல்லைக்கு அருகில் இருக்கும் ரஃபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீன அகதிகள் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பலர் காயமடைந்தனர்.

தாக்குதல் காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்தன.

காஸா முனையின் மத்தியப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் மாண்டதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்