புகைப்பதற்கு எதிராக பிரிட்டன் புது நடவடிக்கை

புகைப்பதற்கு எதிராக பிரிட்டன் புது நடவடிக்கை

1 mins read
371b39e7-dcd7-40b0-8db3-b8144ec9ac40
படம்: - ராய்ட்டர்ஸ்

லண்டன்: எதிர்கால தலைமுறையினர் புகைப் பிடிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பிரிட்டன் அரசாங்கம் இளையர்களுக்கு இடையில் புகைபிடிக்கும் பழக்கத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதற்கான புது மசோதா ஒன்றும் நிறைவேற்றப்படவுள்ளது.

புது மசோதாவில் 2024ஆம் ஆண்டு முதல் 15 வயது அல்லது அதற்குக் கீழ் உள்ளவர்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்கப்படாது.

இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் பெரிய ஆதரவு உள்ளது. அதனால் விரைவில் புது மசோதா சட்ட அங்கீகாரம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்