தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பாம்பு: காப்பாற்றச் சென்றவர் பலி

1 mins read
b0de3a4a-df30-494f-9a3d-36f8cb91e150
பாம்பை அகற்ற முயலும்போது திரு புரூக்ஸ் பாம்புக்கடிக்கு ஆளானார் என்று நம்பப்படுகிறது. - படம்: இணையம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள ஒரு குழந்தைப் பராமரிப்பு நிலையத்திற்குள் ஊர்ந்துவந்த பாம்பை அகற்றச் சென்ற ஆடவர், பாம்புக்கடியால் உயிரிழந்துவிட்டார்.

சிறார்களைப் பாதுகாப்பதற்காக 47 வயது ஜெர்ரோமி புரூக்ஸ் பாம்பை அகற்ற நினைத்தார்.

இருப்பினும், பாம்பு அவரின் கையைப் பலமுறை கடித்தது.

மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், பின்னர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு, அவரின் மனைவி முதலுதவி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பின்னர் திரு புரூக்சுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாம்புகளைக் கையாளவோ அகற்றவோ திரு புரூக்ஸ் முறையான உரிமம் ஏதும் வைத்திருக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்