காவல் அதிகாரியைத் தாக்கிக் கொன்றதாக ஐவர் மீது சந்தேகம்

காவல் அதிகாரியைத் தாக்கிக் கொன்றதாக ஐவர் மீது சந்தேகம்

1 mins read
4b684979-d11a-4b46-80f5-114b6c95c198
19 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக சிலாங்கூர் தலைமைக் காவல்துறை அதிகாரி ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார். - படம்: இணையம்

ஷா அலாம்: காவல்துறை அதிகாரி ஒருவரை அடித்துக் கொன்றதன் சந்தேகத்தில் ஐந்து மலேசியர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூர் படைப்பிரிவைச் சேர்ந்த அந்த அதிகாரியின் உடல், சிலாங்கூர் மாநிலத்திலுள்ள காஜாங் நகரில் மார்ச் 23ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

தலையில் பலத்த காயம் பட்டதால் அதிகாரி உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வுச் சோதனையில் தெரியவந்துள்ளது.

அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் ஐந்து ஆடவர்களின் வயது 19 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டது என்று தெரிவித்தார் சிலாங்கூர் தலைமைக் காவல்துறை அதிகாரி ஹுசேன் ஒமார் கான்.

விசாரணைக்காக அவர்கள் ஏழு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்