போர்நிறுத்தத் தீர்மானம்: ஹமாஸ் வரவேற்பு

1 mins read
11055a82-c304-45a1-a719-c3ec6e1d4504
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம். - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: காஸா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் மார்ச் 25ஆம் தேதியன்று நிறைவேற்றியது.

இதை ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது.

இஸ்‌ரேலுடன் கைதிகள் பரிமாற்றத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாக அது கூறியது.

திங்கட்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் அனைத்துப் பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

வாக்களிப்பில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை.

குறிப்புச் சொற்கள்