‘அப்பா உன்னைக் காப்பாற்றுவேன்’: மனதை நெகிழவைத்த தந்தையின் வார்த்தைகள்

‘அப்பா உன்னைக் காப்பாற்றுவேன்’: மனதை நெகிழவைத்த தந்தையின் வார்த்தைகள்

1 mins read
1ff94db8-1599-461a-a6f0-c1e60b6c85b4
அளவுக்கு அதிகமான வீட்டுப்பாடம் இருப்பதாகவும் தமக்கு மிகவும் சோர்வாக இருப்பதாகவும் கூறி தம்மிடம் முறையிட்டு அழுத மகளைக் கட்டியணைத்து ஆறுதல் கூறிய தந்தை. - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

பெய்ஜிங்: தமக்கு அளவுக்கு அதிகமான வீட்டுப்பாடம் இருப்பதாகவும் எவ்வளவு செய்தாலும் அது முடிவதாகத் தெரியவில்லை என்றும் தந்தையிடம் சிறுமி கண்ணீருடன் தெரிவித்தார்.

மகளின் குமுறல்களைக் கேட்டு அந்தத் தந்தை செய்த செயலுக்குப் பாராட்டு மழை குவிகிறது.

சிறுமி தந்தையிடம் முறையிடுவதும் தந்தை ஆறுதல் கூறுவதையும் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.

இந்தச் சம்பவம் சீனாவின் ஹேனான் மாநிலத்தில் நிகழ்ந்தது.

வீட்டுப்பாடம் சங்கிலித் தொடராக நீண்டுக்கொண்டே செல்வதாகவும் தமக்கு மிகவும் சோர்வாக இருப்பதாகவும் கூறி அச்சிறுமி தமது தந்தையைக் கட்டிப்பிடித்து அழுவதை அந்தக் காணொளி காட்டுகிறது.

இதைக் கேட்ட அந்த தந்தை தமது மகளைக் கட்டியணைத்தார்.

“அப்பா உன்னை காப்பாற்றுவேன். இப்போதைக்கு வீட்டுப்பாடம் செய்வதை நிறுத்திக்கொள்ளலாம். ஒய்வு எடுத்துக்கொள்வோம்,” என்று அந்தத் தந்தை கூறுவதை காணொளியில் காண முடிந்தது.

இது அந்தச் சிறுமிக்குப் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியது.

அந்தத் தந்தையின் வார்த்தைகளும் செயல்களும் காணொளியைப் பார்த்தோரின் மனதை நெகிழ வைத்துள்ளது.

மகளின் உணர்வைப் புரிந்து நடந்துகொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்த அந்த ஆடவரைப் பலர் பாராட்டுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்