பைடன் கை, கால் கட்டப்பட்டிருக்கும் படம்: காணொளியைப் பகிர்ந்தார் டிரம்ப்

1 mins read
0ba9f334-9349-46d4-9901-d4150cd26a4e
அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடது), அதிபர் ஜோ பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது சமூக ஊடக இணையத்தளம் ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 29) காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அதிபர் ஜோ பைடனின் கைகளும் கால்களும் கட்டப்பட்டு இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது.

வியாழக்கிழமை (மார்ச் 28) லாங் ஐலண்டில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த காணொளியை பிற்பகலில் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். கொலை செய்யப்பட்ட நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியின் இறுதிச்சடங்கில் டிரம்ப் வியாழக்கிழமை கலந்துகொண்டார்.

கொடிகளாலும் அலங்காரங்களாலும் வடிவமைக்கப்பட்ட இரண்டு நகரும் லாரிகள் டிரம்ப்பை ஆதரிப்பதைக் காணொளி காட்டுகிறது. இரண்டாவது வாகனத்தின் பின் பகுதியில் திரு பைடனின் படம் இடம்பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்