தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயாரின் காரைக் கொண்டு காவல்துறை வாகனத்தை மோதிய 9 வயது சிறுவன்

1 mins read
6ff1207b-9666-4b19-bb11-0711f5939dcd
சிறுவன் காரை பின்னோக்கிச் செலுத்திக் காவல்துறை வாகனத்தின் மீது மோதிவிட்டார். - படம்: ஃபேஸ்புக்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஒரு விபத்து, திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிபோல் இருந்தது.

தன் தாயாரின் காரைப் பள்ளிக்கு ஓட்டிச் செல்ல முடிவெடுத்த ஒன்பது வயதுச் சிறுவன், காவல்துறை அதிகாரிகளால் துரத்தப்பட்டதுடன் காரை காவல்துறை வாகனம் ஒன்றின் மீதும் மோதினார்.

சாலைச் சந்திப்பு நடுவே சந்தேகத்திற்குரிய வகையில் சாம்பல்நிற ‘வோக்ஸ்வாகன்’ வாகனம் ஒன்று நின்றுகொண்டிருந்ததை கலிஃபோர்னிய நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள் கவனித்துவிட்டனர்.

வாகனத்தை நகர்த்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டபோது அந்த வாகனம் திடீரென்று அதிவேகமாகச் சென்றது.

இதையடுத்து காரை மடக்கிப் பிடிக்க அதிகாரிகள் முயன்றனர்.

வாகனம் நின்றதும் சிறுவன் காரை பின்னோக்கி ஓட்ட, அது அதிகாரியின் சுற்றுக்காவல் கார்மீது மோதிவிட்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை. இரண்டு வாகனங்களுக்குச் சேதமும் அதிகம் இல்லை.

இருப்பினும், ஓட்டுநருக்கு ஒன்பது வயதுதான் என்பதை உணர்ந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

“என்னை மன்னித்துவிடுங்கள். நான் பள்ளிக்குப் போகத்தான் முயற்சி செய்தேன்,” என்று சிறுவன் விளக்கமும் அளித்தான்.

குறிப்புச் சொற்கள்