ஒரே பாலினத் திருமணம்: அனுமதிப்பது குறித்து தாய்லாந்து பரிசீலனை

ஒரே பாலினத் திருமணம்: அனுமதிப்பது குறித்து தாய்லாந்து பரிசீலனை

1 mins read
84d9e4ce-5757-4722-844a-77b5b1d51541
மசோதா ஏற்கப்பட்டு சட்டமாக்கப்பட்டால் ஒரே பாலினத் திருமணங்களை அடையாளம் காணும் முதல் தென்கிழக்காசிய நாடாக தாய்லாந்து திகழும். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: ஒரே பாலினத் திருமணங்களை அனுமதிப்பது குறித்து தாய்லாந்து பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பான மசோதா ஏப்ரல் 2ஆம் தேதியன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா ஏற்கப்பட்டு சட்டமானால் ஒரே பாலினத் திருமணங்களுக்கு அடையாளம் வழங்கும் முதல் தென்கிழக்காசிய நாடாக தாய்லாந்து திகழும்.

ஒரே பாலினத் திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டால் அத்தகைய தம்பதியருக்கு வாடகைத் தாய்ச் சேவை அனுமதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வாடகைத் தாய்ச் சேவை பெற வெளிநாட்டுத் தம்பதியருக்கு 2015லிருந்து நடப்பில் உள்ள தடையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து தாய்லாந்து பரிசீலித்து வருகிறது.

தாய்லாந்தின் மருத்துவச் சுற்றுப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்