டுட்டர்ட்டேக்கு நெருக்கமான சமயத் தலைவரைக் கைது செய்ய உத்தரவு

டுட்டர்ட்டேக்கு நெருக்கமான சமயத் தலைவரைக் கைது செய்ய உத்தரவு

1 mins read
5cc8f31d-1ba9-4ed3-a233-c52602e02bc3
சமயத் தலைவர் அப்போலோ குயிபோலோவுக்கு ஆதரவு தெரிவித்து பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் மார்ச் மாதம் 4ஆம் தேதியன்று பேரணி நடத்தப்பட்டது - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டேக்கு மிகவும் நெருக்கமான கிறிஸ்துவ சமயத் தலைவரைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போலோ குயிபோலோ, ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் அமெரிக்காவின் ‘எஃப்பிஐ’ புலன்விசாரணை அதிகாரிகளாலும் தேடப்பட்டு வருகிறார்.

பாலியல் சேவைக்காக ஆள்களைக் கடத்தியதாக குயிபோலோ மீது அமெரிக்காவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

அப்போலோ குயிபோலோவுக்கு பிலிப்பீன்ஸில் மில்லியன்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்