பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட அமெரிக்க ஆடவர் வீடு திரும்பினார்

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட அமெரிக்க ஆடவர் வீடு திரும்பினார்

1 mins read
e9837a39-a6ca-4c61-9999-47dd84883f97
62 வயது திரு ரிச்சர்ட் சிலேமனுக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு செயல்படுவதாக மருத்துவர்கள் கூறினர். - படம்: நியூயார்க் டைம்ஸ்

பாஸ்டன்: கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அமெரிக்க நோயாளி ஒருவருக்குப் பொருத்தி அந்நாட்டு மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

இத்தகைய சிறுநீரகம் மனிதனுக்குப் பொருத்தப்பட்டது இதுவே முதன்முறை.

அந்தச் சிறுநீரகம் பொருத்தப்பட்ட 62 வயது திரு ரிச்சர்ட் சிலேமனின் உடல்நலம் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டது.

அவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள் அவர் வீடு திரும்ப அனுமதித்தனர்.

அவருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு செயல்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில், திரு சிலேமன் வீடு திரும்பிவிட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்