‘கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையை ஜோகூர் நடைமுறைப்படுத்த வேண்டும்’

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை சுமுகமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவ்வழியாக அடிக்கடி பயணம் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கியூஆர் குறியீட்டு முறையை சிங்கப்பூர் கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தியது.

இது நேரத்தை மிச்சப்படுத்துவதாகப் பயணிகள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி ஜோகூரில் உள்ள சோதனைச்சாவடிகளில் இருக்கும் குடிநுழைவு அதிகாரிகளிடம் கடப்பிதழைத் தந்து அவர்கள் அதைச் சரிபார்த்து முத்திரையிட்ட பிறகே மலேசியாவுக்குள் நுழைய முடியும்.

எனவே, ஜோகூரிலும் இந்த கியூஆர் குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் பயணம் சுமுகமாகவும் இருப்பதுடன் நேரம் மிச்சமாகும் என்று வாரத்துக்குப் பலமுறை ஜோகூர் பாலத்தைக் கடக்கும் 38 வயது திரு ஸுல்ஹாய்ரி ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

“கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையை சிங்கப்பூர் மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்தியது. அதை பயன்படுத்தியிருக்கிறேன். அதைப் பயன்படுத்தியபோது சோதனைச்சாவடிகளைக் கடப்பது சுமுகமாக இருந்தது. எனது கைப்பேசியைப் பயன்படுத்தி அந்தக் கியூஆர் குறியீட்டை வருடினால் போதும். குடும்பம், நண்பர்கள் எனக் கும்பலாகப் பயணம் செய்யும்போது நேரத்தை மிச்சப்படுத்த இது உதவும். வாகனத்தில் உள்ள அனைவரையும் ஒரே குறியீட்டுக் குறியின்கீழ் பதிவு செய்துகொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோகூர் பொதுப்பணி, போக்குதரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் திரு முகம்மது ஃபாஸ்லி முகம்மது சாலே, கியூஆர் குறியீட்டுத் திட்டத்தைப் பற்றி பரிசீலனை செய்ய நோன்புப் பெருநாளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் அமைப்புகளுடன் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையை சிங்கப்பூர் மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகளில் நடைமுறைப்படுத்தியது.

கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையை ஜோகூரில் உள்ள குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசாங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!