தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹூதிப் படையின் வானூர்தியை அழித்துவிட்டோம்: அமெரிக்க ராணுவம்

1 mins read
7d72c2d9-15bf-4994-8397-868d487d6f7f
பிரிட்டிஷ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை அறிவிக்கும் ஹூதிப் படையின் பேச்சாளர். - படம்: இபிஏ

வாஷிங்டன்: செங்கடல் பகுதியில் ஹூதிப் படையினரின் வானூர்தியையும் ஆகாயத் தற்காப்பு சாதனத்தையும் தாக்கி அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தெரிவித்தது.

இருப்பினும், அந்த நடவடிக்கையின்போது யாருக்கும் காயமோ வர்த்தகக் கப்பல்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்று அது குறிப்பிட்டது.

ஏமனில் ஹூதி கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்தில் தாக்குவதற்குத் தயாராக இருந்த இரு ஏவுகணைகளும் ஏமனில் இருந்து செங்கடலுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா வானூர்தி ஒன்றும் அழிக்கப்பட்ட விவரத்தை அமெரிக்க ராணுவத்தின் மத்திய தளபத்தியம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.

முன்னதாக, பிரிட்டிஷ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கப்பல்களைக் குறிவைத்து ராக்கெட்டுகளையும் வானூர்திகளையும் ஏவி இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹூதிப் படை தெரிவித்து இருந்தது.

காஸா போரில் ஈடுபட்டு வரும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹூதிப் படை செயல்பட்டு வருகிறது.

பாலஸ்தீனர்களின் ஒற்றுமையைக் காட்டவும் காஸாவில் ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்குப் பதிலடி தரும் விதமாகவும் செங்கடல் வட்டாரத்தில் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக ஹூதி போராளிகள் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்