லண்டன்: மனைவியைக் கொன்று அவரது உடலை 200க்கும் அதிகமான துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய பிரிட்டிஷ் ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலைக் குற்றத்தை 28 வயது நிக்கலஸ் மெட்சன் ஒப்புக்கொண்டார்.
அவர் குறைந்தபட்சம் 19 ஆண்டுகள், 316 நாள்களுக்கு சிறையில் அடைக்கப்படுவார் என்று ஏப்ரல் 8ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அவருக்கு உடந்தையாக இருந்த ஜோஸ்வா ஹென்கொக்கிற்கு மூன்று ஆண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
துண்டுத் துண்டாகக் கிடந்த உடலை ஆற்றில் வீச மெட்சனுக்கு அவர் உதவியதாகக் கூறப்படுகிறது.
26 வயது திருவாட்டி ஹாலி பிராம்லியை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதியன்று மெட்சன் கத்தியால் பலமுறை குத்திக் கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.