பிலிப்பீன்சில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் கடற்படை விமானிகள் இருவர் பலி

1 mins read
3a43b093-678b-4065-92dd-8e486d64eed5
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விமானிகள் சிகிச்சை பலனின்றி மாண்டனர். - படம்: கோப்புப்படம்

மணிலா: பிலிப்பீன்சின் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஏப்ரல் 11ஆம் தேதி விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த இரண்டு விமானிகள் மாண்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

அந்த இரு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த விமானிகள் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி மாண்டதாக பிலிப்பீன்ஸ் கடற்படை கூறியது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்