தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீன சொகுசு காரை வாங்கிய மலேசிய மாமன்னர்

1 mins read
ஹோங்சி எல்5 காரைத் தனிப்பட்ட முறையில் வாங்கிய உலகின் முதல் உரிமையாளர்
11411d37-5996-494e-85d3-3c72f3da3c84
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், ஏப்ரல் 12ஆம் தேதி தமது புதிய சொகுசு காரின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். - படம்: சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர்/ஃபேஸ்புக்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் சீனாவின் ஆக விலையுயர்ந்த ஹோங்சி எல்5 சொகுசு காரை வாங்கியுள்ளார்.

தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய அந்த வகை கார் சீனாவின் அதிகாரபூர்வ தேசிய கார் என்பதும் சீன அதிபர் ஸி ஜின்பிங் பயன்படுத்தும் கார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

எஃப்ஏடபிள்யூ குழுமம் தயாரிக்கும் அந்த காரின் விலை ஐந்து மில்லியன் யுவான் (S$940,375).

ஏப்ரல் 12ஆம் தேதி மலேசியாவுக்கான சீனத் தூதர் ஓயுவாங் யுஜிங்குடனான சந்திப்பில் தமது புதிய காரின் படங்களை மாமன்னர் வெளியிட்டார்.

சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்தும் இரு நாடுகள் தொடர்பான தற்போதைய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசதந்திர உறவுகள் குறித்த தமது கண்ணோட்டத்தை மாமன்னர் அதில் பகிர்ந்துகொண்டார். ஒத்துழைப்புக்கான கூடுதல் வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

“முக்கியமான உலகப் பொருளியலாக விளங்கும் சீனா மலேசியாவின் நீண்டகால வர்த்தகப் பங்காளி,” என்று மாமன்னர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியர்களுக்குக் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மேலும் அதிகமான சீன நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படங்கள்:
படங்கள்: - சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர்/ஃபேஸ்புக்
குறிப்புச் சொற்கள்