நிலைத்தன்மையற்ற உலகில், புதுப்பிப்பும் உறுதிப்படுத்துவதும் முக்கியம்: துணைப் பிரதமர்

நிலைத்தன்மையற்ற உலகில் சிங்கப்பூர் முன்னேறிச் சென்றாலும், மாபெரும் அதிகார அரசியலின் புதிய சகாப்தத்தில், அணுக்கமான பங்காளித்துவங்களைப் புதுப்பிப்பதும் உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

எனவேதான், பிரான்ஸ் உடனான தனது பங்காளித்துவத்தை சிங்கப்பூர் புதுப்பித்து, உறவுகளை வலுவாக்குகிறது. 2025ல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் 60வது ஆண்டு நிறைவுக்கு முன்னதாகவே முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்துக்காக செயல்படுகிறது என்றார் அவர்.

மேலும், சிங்கப்பூரும் ஜெர்மனியும் இருதரப்பு உறவுகளின் ‘வளர்ந்து வரும் ஆழத்தையும் அகலத்தையும்’ அங்கீகரிக்கும் வகையில், உறவுகளை ஒரு கேந்திர முக்கியத்துவப் பங்காளித்துவமாக மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்.

நிதி அமைச்சருமான வோங், ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 வரை ஜெர்மனியிலும் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 13 வரை பிரான்சிலும் இருந்தார். அப்போது அவர் இரு நாடுகளின் மூத்த அரசாங்க, தொழில்துறைத் தலைவர்களையும் சந்தித்தார்.

பிரதமர் பதவியை ஏற்கத் தயாராகும் நிலையில், இந்தப் பயணங்கள் வெளிநாட்டு சகாக்களுடன் நல்லுறவை வளர்க்க உதவியதா என்ற கேள்விக்கு, “அதுவே இந்தப் பயணங்களின் நோக்கம்,” என்றார்.

“இந்த நாடுகளுடனும், நான் இணைந்து பணியாற்ற உள்ள தலைவர்களுடனும் ஈடுபாட்டை ஏற்படுத்துவது, முக்கியமாக, தற்போதைய பதவியில் மட்டுமின்றி, எதிர்காலத்தில் நான் பிரதமராகும்போதும் முக்கியம்” என்றார் அவர்.

ஐரோப்பிய பயணத்தின் முடிவில், பாரிசில் உள்ள சிங்கப்பூர்த் தூதரக அலுவலகத்தில் சிங்கப்பூர் ஊடகங்களிடம் திரு வோங் பேசினார்.

நவம்பர் 2025க்குள் நடத்தப்பட வேண்டிய அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக துணைப் பிரதமர் வோங் பிரதமர் லீ சியன் லூங்கிடம் இருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

‘உத்திபூர்வ’ அல்லது ‘விரிவான’ போன்ற வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்வதல்ல பங்காளித்துவம். அது இணைந்து மேற்கொள்ளும் செயல்களை உறுதிப்படுத்துவதும் அர்த்தமுள்ளதாக்குவதுமாகும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கப் புத்தாக்கம், பசுமை மற்றும் நீடித்த நிலைத்தன்மைத் திட்டங்கள் அல்லது இரு நாடுகளுடனும் சிங்கப்பூர் ஏற்கெனவே அணுக்கமான உறவுகளைக் கொண்டுள்ள தற்காப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற இருதரப்பு நலன்களில் புதிய பகுதிகளை அடையாளம் காண்பதும் இதில் அடங்கும்.

ஐரோப்பா தற்காப்புத் துறையில் குறிப்பாக உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் அதிகம் செலவிடுவதாக துணைப் பிரதமர் வோங் கூறினார். “உக்ரேனை ஆதரிக்க அவர்கள் அதிகம் செய்கிறார்கள். அதேநேரத்தில், பாதுகாப்பு தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளில் சிங்கப்பூர் போன்ற பிற பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ், ஜெர்மனி இரண்டும் ஆர்வமாக உள்ளன,” என்றார் அவர்.

பங்காளித்துவத்தைப் புதுப்பிப்பது அல்லது மேம்படுத்துவது என்பதும் தற்போதைய யதார்த்தங்களின் வெளிப்பாடு என்றார் அவர். பிரான்சுடன் சிங்கப்பூர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேந்திர முக்கியத்துவப் பங்காளித்துவம் கொண்டுள்ளது, மேலும் இரு நாடுகளும் பாதுகாப்பு, பொருளியல் போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றியுள்ளன. இந்தப் பங்காளித்துவம் தற்போது ‘விரிவான’ பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

ஜெர்மனியுடன் சிங்கப்பூருக்கு இதுவரை எத்தகைய கேந்திர முக்கியத்துவப் பங்காளித்துவமும் இல்லை என்றாலும், பொருளியல், பாதுகாப்புத் துறைகளில் பல ஆண்டுகளாக உறவு நன்கு வளர்ந்துள்ளது. எனவே, இதை ‘கேந்திர முக்கியத்துவப் பங்காளித்துவம்’ என்று அழைப்பது பொருத்தமானது என்று அவர் மேலும் கூறினார்.

சிங்கப்பூரும் பிரான்சும் 2025 ஆம் ஆண்டில் தங்கள் அரசதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2024 - 2025ஐ, பிரான்ஸ் -சிங்கப்பூர் கூட்டு நிலைத்தன்மை ஆண்டாக அறிவிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

2050ஆம் ஆண்டிற்குள் நிகர கரிம வெளியீடற்ற நிலையை எட்டுவதற்கான இரு நாடுகளின் கடப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது.

2024 ஏப்ரல் முதல் 2025 நடுப்பகுதி வரை நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளும் முயற்சிகளும் தொடரும். பசுமை, நீடித்த நிலைத்தன்மைத் துறைகளில் இருதரப்பு முயற்சிகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க பிரான்சும் சிங்கப்பூரும் அரசாங்க அமைப்புகள், வெளிப்புற பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!