டிரம்ப் வழக்கு: நீதிமன்றத்துக்கு வெளியே ஆடவர் தீக்குளிப்பு

1 mins read
d52449eb-ae15-440a-9af5-8306ae05ef9c
நீதிமன்றத்துக்கு வெளியே ஆடவர் தீக்குளித்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: ஆபாசப் பட நடிகையிடம் பணம் கொடுத்தது தொடர்பாக ஏப்ரல் 19ஆம் தேதியன்று முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது அந்த நீதிமன்றத்துக்கு வெளிய ஆடவர் ஒருவர் தீக்குளித்தார்.

அவர் டிரம்ப்பைக் குறிவைக்கவில்லை என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அந்த ஆடவர் பல நிமிடங்களுக்குத் தீப்பிடித்து எரிந்ததாகவும் டிரம்ப்பைக் காணொளி எடுக்க நீதிமன்றத்துக்கு வெளியே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த பல செய்தி நிறுவனங்களின் கேமராக்களில் அக்கோரக் காட்சி பதிவானதாகவும் நியூயார்க் காவல்துறை கூறியது.

நீதிமன்றத்துக்கு வெளியே ஆடவர் தீக்குளித்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அந்த ஆடவர் படுகாயம் அடைந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்