படகு கவிழ்ந்ததில் 50 பேர் உயிரிழப்பு

படகு கவிழ்ந்ததில் 50 பேர் உயிரிழப்பு

1 mins read
8962334e-da9b-4686-b312-f907316de782
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்தவர்களுக்கு அப்படகுப் பயணம் இறுதிப் பயணமாக அமைந்தது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. - படம்: எக்ஸ் தளம்

பங்குயி: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகர் பங்குயில் உள்ள ஓர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 50 பேர் மாண்டனர்.

அவர்கள் அனைவரும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்னொரு கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த அவர்களுக்கு அப்படகுப் பயணம் இறுதிப் பயணமாக அமைந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் ஏப்ரல் 19ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

ஆற்றிலிருந்து 50 சடலங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேடுதல் பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.

படகில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்