சிட்னி பேராயர் கத்திக்குத்து: பதின்மவயதினர் ஏழு பேர் கைது

சிட்னி பேராயர் கத்திக்குத்து: பதின்மவயதினர் ஏழு பேர் கைது

1 mins read
eb21e4ad-aecd-400b-a85f-6fd4f40fbba0
ஏப்ரல் 15ஆம் தேதியன்று சிட்னியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பேராயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 15ஆம் தேதியன்று நிகழ்ந்த அந்தச் சம்பவத்தை சமயம் தொடர்பான பயங்கரவாதத் தாக்குதல் என்று ஆஸ்திரேலியக் காவல்துறை வகைப்படுத்தியுள்ளது.

பேராயரைக் கத்தியைப் பயன்படுத்தி தாக்கிய 16 வயது இளையர் சம்பவ நாளன்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளையருடன் தொடர்புடைய ஏழு பதின்மவயதினரை காவல்துறையினர் ஏப்ரல் 24ஆம் தேதியன்று கைது செய்தனர்.

மேலும் ஐவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

“பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு இனி எவ்வித ஆபத்தும் இல்லை என்று உறுதி அளிக்கிறேன். எதிர்காலத்தில் எவ்வித பாதிப்பு, அபாயம் ஏற்படாதபடி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலக் காவல்துறையின் துணை ஆணையர் டேவிட் ஹட்சன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்