மோனா லிசாவுக்கு தனி அறை தரப்படலாம்

மோனா லிசாவுக்கு தனி அறை தரப்படலாம்

1 mins read
e21272e7-97df-4513-a25f-59c4d3ce1cd9
லியோனார்டோ டா வின்சியின் ‘மோனா லிசா’ ஓவியத்தைக் காணத் தினமும் 20,000 பேர் லூவோருக்கு வருகை புரிகின்றனர். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: உலகின் ஆகப் புகழ்பெற்ற உருவப்படமான ‘மோனா லிசா’ ஓவியம், லூவோர் அருங்காட்சியகத்தில் தனியே ஓர் அறையில் காட்சிக்கு வைக்கப்படக்கூடும் என்று அருங்காட்சியகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஓவியத்தைப் பார்ப்பதற்காகவே வருகைதருவோருக்கு இது மேம்பட்ட அனுபவத்தை அளிக்கும் என்று திருவாட்டி லாரன்ஸ் டி கார்ஸ் கூறினார்.

வருகையாளர்களுக்கு அமோக வரவேற்பு தர முடியாமல் போகும்போது அது தனக்கு அதிருப்தியைத் தருவதாகக் குறிப்பிட்ட அவர், மோனா லிசா ஓவியத்துக்கு எப்போதுமே அந்த நிலை ஏற்படுகிறது என்றார்.

உலகின் ஆகப் புகழ்பெற்ற அருங்காட்சியகமானது ‘லூவோர்’. இது 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் வருகையாளர்களை வரவேற்றது.

இன்றுவரை புதிராகத் தோன்றும் மோனா லிசாவின் புன்னகையை ரசிப்பதற்காகவே தினமும் அருங்காட்சியகத்திற்கு வருவோரில் குறைந்தது 80 விழுக்காட்டினர் அதாவது 20,000 பேர் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு உருவப்படத்தின் முன்னால் இடம் பிடித்துக்கொள்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்