ரியாத்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சவூதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
காஸா போர் முடிவுக்கு வந்ததும் காஸாவை ஆட்சி செய்யும் முறை உட்பட பல விவகாரங்கள் குறித்து கலந்துரையாட அவர் மத்திய கிழக்கிற்குச் சென்றுள்ளார்.
சவூதி தலைநகர் ரியாத்தில் அமைச்சர் பிளிங்கன், சவூதி அரேபியத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதுடன் கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவார்.
அதனைத் தொடர்ந்து, அவர் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிநிலையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கும்படி இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பலமுறை தெரிவித்துவிட்டார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அமைச்சர் பிளிங்கன் சந்தித்து இதை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போருக்குப் பிறகு காஸாவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அரபு நாடுகளுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் அமைச்சர் பிளிங்கன் கலந்துரையாடுவார் என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குல்களின் விளைவாக காஸா நிலைகுலைந்து காணப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அத்தியாவசியப் பொருள் இன்றி மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் அவதியுறுகின்றனர்.
போர் நிறுத்தத்துக்கு உலக நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், போர் நிறுத்தம் குறித்து கலந்துரையாட ஹமாஸ் அமைப்பினர் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

