அரச பொறுப்புகளில் மீண்டும் ஈடுபடும் மன்னர் சார்ல்ஸ்

1 mins read
c4f31cc3-ca4c-432c-b2dc-61960cf3d45d
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலன் அளிப்பதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று பக்கிங்ஹம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மன்னர் சார்ல்ஸ் அரச பொறுப்புகளில் மீண்டும் ஈடுபடுவார் என்று அது கூறியது.

அதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 30ஆம் தேதியன்று புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்றிற்கு செல்லும் அவர் அங்குள்ள நோயாளிகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்