தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பெருங்கடலில் கொள்கலன் கப்பல்மீது தாக்குதல் நடத்திய ஹூதி படை

1 mins read
3e67488f-0722-4b63-8c78-a936472839cf
இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் தேதி ஏமனில் இருக்கும் சனா பகுதியில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக நடந்த போராட்டத்தின்போது, ​​பாலஸ்தீனர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் போலியான ஆர்பிஜி உந்துகணை மூலம் இயக்கப்படும் கைக்குண்டு ஏவுகணை ஒன்றை ஹூதி ஆதரவாளர் ஒருவர் எடுத்துச் சென்றார். - படம்: இபிஏ

துபாய்/கெய்ரோ: இந்தியப் பெருங்கடலில் எம்எஸ்சி ஓரியன் கொள்கலன் கப்பலைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடந்தப்பட்டதாக ஏமனின் ஹூதிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

காஸா போரில் ஈடுபட்டு வரும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹூதிப் படை செயல்பட்டு வருகிறது.

பாலஸ்தீனர்களின் ஒற்றுமையைக் காட்டவும் காஸாவில் ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்குப் பதிலடி தரும் விதமாகவும் அனைத்துலகக் கப்பல் போக்குவரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஹூதி போராளிகள் இறங்கியுள்ளனர்.

போர்ச்சுகல் நாட்டுக் கொடியுடன் எம்எஸ்சி ஓரியன் கப்பல் போர்ச்சுகளின் சைன்ஸ், ஓமானின் சலாலா ஆகிய துறைமுகங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அக்கப்பலின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் ‘சோடியாக் மரிடைம்’ நிறுவனம் எனவும் லண்டன் பங்குச் சந்தைக் குழுமத்தின் (எல்எஸ்இஜி) தரவுகள் தெரிவித்தன.

அந்நிறுவனம் இஸ்ரேலியத் தொழிலதிபர் இயல் ஆஃபருக்கு சொந்தமானது என்றும் இத்தாக்குதல் குறித்த கேள்விக்கு அந்நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்