தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கென்யா வெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 228ஆக அதிகரிப்பு

1 mins read
b0c98801-8385-4bf1-ab67-70714582ed0e
கனமழை காரணமாக கென்யாவின் போக்குவரத்து கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமாகியுள்ளன.  - படம்: இபிஏ

நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 228 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகப் பெய்த கன மழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டன. மே மாதத்திலும் கனமழை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதால் கென்ய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாழ்வான பகுதிகளிலும் மலையடிவாரங்களிலும் ஆற்றின் ஓரங்களிலும் வாழ்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

கனமழை காரணமாகக் கென்யாவின் போக்குவரத்து கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமாகியுள்ளன.

வீடுகள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 200,000க்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்