தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபேஸ்புக் வாயிலாக குழந்தை விற்பனை

2 mins read
def7527a-57a0-471a-b2cc-a2e420fb61f2
குழந்தையைத் தத்து எடுக்க செலவு அதிகம் என்பதால் தாய்லாந்தில் பலரும் ஃபேஸ்புக் வாயிலாக குழந்தைகளை வாங்குவதாகக் கூறப்படுகிறது. - படம்: சமூக ஊடகம்

பேங்காக்: ஃபேஸ்புக் குரூப் ஒன்றின் மூலம் குழந்தை விற்பனை நடைபெறுவதாக தாய்லாந்து ஃபேஸ்புக்’ பக்கம் தெரிவித்து உள்ளது. தற்போது, விற்பனையில் ஈடுபட்ட அந்த ஃபேஸ்புக் குழு இயங்கவில்லை.

இதன் தொடர்பில் மோர் லேப் பாண்டா என்ற பெயர் கொண்ட ஃபேஸ்புக் குரூப் பதிவேற்றி உள்ள படம் ஒன்று தாய்லாந்து இணையவாசிகளின் பல்வேறு பதிவுகளைக் காட்டியது.

தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் இருந்து பெண் குழந்தைகளை வாங்க அந்த குரூப்பில் இடம்பெற்றுள்ள பலரும் ஆர்வம் காட்டியதை அந்தப் பதிவுகளில் காணமுடிந்தது.

குழந்தை விற்பனை செய்யும் அந்த ஃபேஸ்புக் குரூப்பின் பயனாளர் ஒருவர், பொதுமக்கள் ஏன் சட்டப்படி குழந்தைகளைத் தத்தெடுப்பதில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த ஒருவர், தத்து எடுப்பதற்கான நடைமுறை பல்வேறு ஆவணங்களையும் தகுதிநிலைகளையும் உள்ளடக்கியது என்பதோடு செலவுமிக்கது என்று தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் குரூப் வாயிலாக குழந்தைகளை எளிதில் வாங்க முடிவதாகவும் அவர் கூறினார்.

குழந்தை வாங்க விரும்பும் ஒருவர் தமது மாதச் சம்பளம் 18,500 பாட் (S$683) என்றும் குழந்தையைத் தத்து எடுக்க இந்த வருமானம் போதாது என்று பல்வேறு முகவைகள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதின்ம வயதுப் பெண்கள் பலரும் தாங்கள் தாய்மையுற்று இருப்பதாகவும் குழந்தையை இப்போதே விற்பனைக்குக் கேட்கலாம் என்றும் படத்துடன் ஃபேஸ்புக் பதிவுகளைச் செய்துவருவதாக பல்வேறு ஃபேஸ்புக் பக்கங்கள் தெரிவித்து உள்ளன.

இருப்பினும் இவற்றில் பல மோசடியானவையாக உள்ளன. ஃபேஸ்புக் குரூப்பைச் சேர்ந்த ஒருவர் குழந்தையைத் தத்தெடுக்கும் முயற்சியில் 50,000 பாட் பணத்தை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்