ஜப்பானிய ராணுவத்தில் பெண்கள் சேர தடைக்கல்லாக விளங்கும் பாலியல் துன்புறுத்தல்

ஜப்பானிய ராணுவத்தில் பெண்கள் சேர தடைக்கல்லாக விளங்கும் பாலியல் துன்புறுத்தல்

1 mins read
fe1bd689-efed-4556-a9ae-a73ef2078345
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகம் இருப்பதால் ராணுவத்தில் சேர பெண்கள் பலர் தயங்குவது இயல்புதான் என்று பாதிப்பட்ட பெண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பான் தனது ராணுவப் பலத்தை வலுப்படுத்துகிறது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அது உயர்த்துகிறது.

ராணுவத்தில் கூடுதல் பெண்களைச் சேர்க்க ஜப்பானிய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

ஆனால் ராணுவத்துக்குத் தேவையான பெண் அதிகாரிகளை ஈர்ப்பதில் ஜப்பானிய அரசாங்கம் சிரமப்படுகிறது.

ஜப்பானிய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகள் பலர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதே இதற்கு முக்கியக் காரணம்.

இந்நிலையில், ஜப்பானியத் தற்காப்புப் படையில் சேர விண்ணப்பம் செய்த பெண்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி 12 விழுக்காடு குறைந்தது.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகம் இருப்பதால் ராணுவத்தில் சேர பெண்கள் பலர் தயங்குவது இயல்புதான் என்று பாதிப்பட்ட பெண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாகத் தீர்வு காணத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு சூளுரைத்திருந்தது.

ஆனால், இதுதொடர்பான சுயேச்சை நிபுணர் குழு முன்வைத்த முக்கியப் பரிந்துரையை அமைச்சு நடைமுறைப்படுத்தவில்லை.

ராணுவப் பயிற்சியின்போது நடக்கும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய தேசிய அளவிலான அணுகுமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஜப்பானியத் தற்காப்பு அமைச்சுக்கு இல்லை என்று ராணுவப் பயிற்சிகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் இருவர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்