பிலிப்பீன்ஸ்: சர்ச்சைக்குரிய பகுதியை சீனா கைப்பற்றுவதை அனுமதியோம்

பிலிப்பீன்ஸ்: சர்ச்சைக்குரிய பகுதியை சீனா கைப்பற்றுவதை அனுமதியோம்

1 mins read
77a6eb2c-8557-44ae-bebc-8c69b926ca42
மணிலா எஸ்கோடா என்று அழைக்கும் சபினா ஷோல் பிலிப்பீன்சின் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. - படம்: பிலிப்பீன்ஸ் ஆயுதப் படை

மணிலா: தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள சபினா ஷோலில் சீனா மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க பிலிப்பீன்சின் கடலோரக் காவல்படை உறுதி பூண்டுள்ளது.

மே 11ஆம் தேதி சபினா ஷோலுக்கு கப்பல்களை அனுப்பி வைத்ததாக அப்படை தெரிவித்தது. அங்கு செயற்கை தீவை சீனா நிர்மாணித்து வருவதாகக் கூறப்படுவதால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. அவ்வட்டாரத்துக்கு மேலும் இரண்டு கப்பல்களையும் சுழற்சி முறையில் சுற்றுக் காவலுக்கு பிலிப்பீன்ஸ் அனுப்பி வைத்துள்ளது.

பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படையின் பேச்சாளர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அப்போது சபினா ஷோலில் மணல் திட்டுகளில் நொறுக்கப்பட்ட பவளக் குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது கூறியது. இதனால் அவற்றின் அளவு, உயரம் மாறியிருந்தது.

இந்நிலையில் மே 13ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படையின் பேச்சாளர், சபினா ஷோலில் சீனா வெற்றிகரமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

மணிலா ‘எஸ்கோடா’ என்று அழைக்கும் சபினா ஷோலில் தனது படை தொடர்ந்து இருக்க கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்