பேராக் வெள்ளம்: துயர் துடைப்பு நிலையங்களில் அடைக்கலம் நாடியோர் எண்ணிக்கை குறைந்தது

பேராக் வெள்ளம்: துயர் துடைப்பு நிலையங்களில் அடைக்கலம் நாடியோர் எண்ணிக்கை குறைந்தது

1 mins read
72659916-759b-4e8d-bd2c-44e7a7334778
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. - படம்: ‘மலே மெயில்’ நாளிதழ்

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வெள்ளம் மோசமாக இருந்தபோது 529 பேர் (163 குடும்பங்கள்) தங்கள் வீட்டிலிருந்து வெளியேறி துயர் துடைப்பு நிலையங்களில் அடைக்கலம் நாடினர்.

இந்நிலையில், மே 18ஆம் தேதி இரவு நிலவரப்படி துயர் துடைப்பு நிலையங்களில் இருப்போர் எண்ணிக்கை 100ஆக (29 குடும்பங்கள்) குறைந்தது.

சில இடங்களில் வெள்ளம் வடிந்ததே இதற்குக் காரணம் என்று பேராக் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் ஐந்து துயர் துடைப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் நான்கு நிலைங்கள் தைப்பிங்கிலும் ஒரு நிலையம் கோலா கங்சாரிலும் இருப்பதாக பேராக் பேரிடர் நிர்வாகக் குழுச் செயலகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்