ஆய்வு: தாய்லாந்தில் கஞ்சாவைப் போதைப்பொருளாக மீண்டும் வகைப்படுத்த பேராதரவு

ஆய்வு: தாய்லாந்தில் கஞ்சாவைப் போதைப்பொருளாக மீண்டும் வகைப்படுத்த பேராதரவு

1 mins read
a7c134b9-06ff-482f-b129-bc5d90a9a7f2
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் ஏறத்தாழ 76 விழுக்காட்டினர் கஞ்சாவைப் போதைப்பொருளாக மீண்டும் வகைப்படுத்த அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கொண்டுள்ள திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: கஞ்சாவைப் போதைப்பொருளாக மீண்டும் வகைப்படுத்த அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் திட்டமிட்டுள்ளார்.

இதைப் பெரும்பாலான தாய்லாந்து மக்கள் ஆதரிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கஞ்சாவைப் போதைப்பொருளாக மீண்டும் வகைப்படுத்துவது குறித்து தாய்லாந்தின் தேசிய மேம்பாட்டு நிர்வாகக் கழகம் ஆய்வு நடத்தியது.

ஆய்வில் பங்கெடுத்தவர்களில் ஏறத்தாழ 76 விழுக்காட்டினர் திரு ஸ்‌ரேத்தாவின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மே 14, 15ஆம் தேதிகளில் தொலைபேசி மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 1,310 தாய்லாந்து நாட்டினர் பங்கெடுத்தனர்.

அவர்கள் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள்.

கஞ்சாவைப் போதைப்பொருளாக மீண்டும் வகைப்படுத்தக்கூடாது என்று ஆய்வில் பங்கெடுத்தோரில் கிட்டத்தட்ட 23.4 விழுக்காட்டினர் கூறினர்.

0.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்