சாவ் பாவ்லோ: வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலின் ரியோ கிராண்ட டொ சுல் மாநிலத்தில் பண்ணை விலங்குகளுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
அதனால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. அதோடு, உலகில் ஆக அதிக அளவில் உணவு வகைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான பிரேசிலில் இறைச்சி உற்பத்திக்கு இடையூறுகள் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ கிராண்ட டொ சுல்லில் ஹோக் ரக பன்றிகளை மேய்க்கும் விவசாயிகள் ஏறத்தாழ 12,600 பன்றிகளை இழந்துவிட்டனர். சுமார் 30 பண்ணைகள் பாதிக்கப்பட்டதாக பன்றி விவசாயம் சார்ந்த உள்ளூர் அமைப்பான ‘ஏசிஎஸ்யுஆர்எஸ்’இன் தலைவர் வால்டெச்சிர் ஃபொலாடோர் திங்கட்கிழமையன்று (மே 20) கூறினார்.

