பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் சிரேத்தா தவிசின் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.
இதனால் அவர் அரசமைப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரும் மனு ஒன்றை அந்நாட்டின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்ற மாதம் பிச்சித் சுவென்பான் என்ற அந்த வழக்கறிஞரை அமைச்சராக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமருக்கு எதிரான மனுவில் தீர்ப்புக்கு முன் அவரை பதவி நீக்க வேண்டும் என்று அந்த செனட்டர்கள் குழு கோரிக்கை விடுத்திருந்தது. இதை நீதிமன்றம் எற்கவில்லை.
இந்நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக திரு சிரேத்தாவுக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடாது எனக் கருதிய திரு பிச்சித் மே 21ஆம் தேதி பதவி விலகினார்.
அண்மைய வாரங்களில் தாய்லாந்து அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு பிரதமருக்கு எதிராகப் போகுமானால், அது நாட்டின் பொருளியலை முடுக்கிவிட்டு 50 மில்லியன் மக்களுக்கு ரொக்கம் தரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற போராடி வரும் அரசுக்கு பேரிடியாக விளங்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்துக் கூற தாய்லாந்து அரசு மறுத்துவிட்டது.